இணையத்தளங்களை டவுன்லோட் செய்து ஓப்லைனில் பயன்படுத்த..

நாம் இணையத்தில் தகவல்களைத் தேடுகின்ற சந்தர்ப்பங்களில் சில இணையப்பக்கங்களை எமது கணினியில் சேமித்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சில வேளைகளில் குறிப்பிட்ட இணையத்தளத்திலுள்ள தகவல்கள் அனைத்தையும் எமது கணினிக்கு சேமிக்க வேண்டிய தேவை ஏற்படும். இதன் போது ஒவ்வொரு பக்கமாக க்ளிக் செய்து அதனை சேமிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட இணையத்தளத்தை முழுமையாக டவுன்லோட் செய்யக் கூடிய மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும். அவ்வாறான மென்பொருட்களில் ஒன்றுதான் WinHTTrack .

நமது கணினியின் வேகம், இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இம்மென்பொருள் இணையத்தளங்களை டவுன்லோட் செய்கிறது. டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போது தடங்கல் ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் வசதி, இணையத்தளங்களை நமது வசதிக்கு ஏற்ப வகைப்படுத்தி சேமிக்கும் வசதி, நாம் சேமித்த இணைத்தளத்தில் புதிய விடயங்கள் வெளியிடப்படுகின்ற போது அதனை Update செய்யும் வசதி போன்றவற்றையும் இது கொண்டு காணப்படுகின்றது.  இம்மென்பொருளை http://www.httrack.com என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை(சுருக்கமாக..)

    WinHTTrack ஐ த் திறந்து கொள்ளுங்கள்.

File மெனுவில் New என்தனைக் க்ளிக் செய்யுங்கள்.

    Next என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

சேமிக்கும் இணையத்தளத்திற்குரிய பெயரையும் அதற்குரிய வகையையும் கொடுங்கள்(வகை கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை). சேமிக்கும் இடத்தினைக் கொடுங்கள்.

    Next ஐ க்ளிக் செய்த பின்னர், Action என்பதில் பொருத்தமானதைக் கொடுங்கள்(இப்போது நாம் கொடுப்பது Download my website(s)என்பதனை.)Web addresses(URL) என்பதில் தரவிறக்க வேண்டிய இணையத்தளத்தின் பெயரைக் கொடுங்கள்.

Next ஐ க்ளிக் செய்து, ரேடியோ பட்டனில் முதலாவது இருப்பதனைத் தெரிவு செய்து Finish என்பதனைக் க்ளிக் செய்யுங்கள். இனி இணையத்தளம் டவுன்லோட் ஆகத் தொடங்கும்.

டவுன்லோட் முடிந்த பின்னர் இணையத்தளங்களைப் பார்ப்பதற்கு File மெனுவில் Browse sites என்பனைக் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

WinHTTrack மூலமாக பயனுள்ள இணையத்தளங்களை டவுன்லோட் செய்து பிரயோசனமடையுங்கள்.

Leave a comment