கூகுள் குரோமிலிருந்து புக்மார்க்குகளை HTML ஆக சேமித்தல்

நாம் கூகுள் குரோமினூடாக இணையத்தைப் பயன்படுத்துகின்ற போது நமக்குப் பிடித்தமான இணையப்பக்கங்களை புக்மார்க்காகப் பதிந்து வைத்திருப்போம். இவ்வாறு பதிந்து வைத்திருக்கின்ற புக்மார்க் பக்கங்களை இலகுவாக HTML கோப்பாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

01. கூகுள் மெனுவில் Bookmarks என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

02. Bookmark Manager என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
03. இப்போது Organize என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
04. Export bookmarks to HTML file.. இனைக் க்ளிக் செய்யுங்கள்.
05. இப்போது தேவையான இடத்தைத் தெரிவு செய்து சேமித்துக் கொள்ளலாம்.

Advertisements

பயர்பொக்ஸ் இப்போது தமிழில்

இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்காக நாம் பயன்படுத்துகின்ற பயர்பொக்ஸ் வலையுலவி (Web Browser) தற்போது தமிழில் வெளிவந்திருக்கிறது.

இதனை நமது கணினியில் நிறுவுகின்ற போது தமிழிலேயே அறிவுறுத்தல்கள் தரப்படுகின்றன. அத்தோடு இவ்வுலவியின் இடைமுகப்பிலுள்ள (Interface) அனைத்துக் கட்டளைகளும் தமிழில் காணப்படுகின்றன. உதாரணமாக File  என்பது கோப்பு எனவும் History என்பது வரலாறு எனவும்  Bookmarks என்பது புத்தகக்குறிகள் எனவும் find என்பது கண்டுபிடி எனவும் காணப்படுகின்றன. தமிழ் மென்பொருள் விரும்பிகளுக்கும் ஆங்கிலத்தில் கணினியைப் பாவிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளாகும்.

இதனை   இந்த முகவரியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

installation

பயர்பொக்ஸ் நிறுவலின் போது தமிழ் அறிவுறுத்தல்கள்

interface

பயர்பொக்ஸ் தமிழ் இடைமுகப்பு

புகைப்படங்களினால் ஒரு வலைப்பூ உருவாக்குவோம்.

புகைப்படங்கள் எடுப்பதென்பது ஒரு கலை. பல ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வேண்டியதை ஒரு புகைப்படம் சொல்லி விடும். புகைப்படங்கள் எடுப்பதற்கு கமராதான் வேண்டுமென்பதில்லை. நல்ல கமரா வசதியுள்ள மொபைல் போன் இருந்தாலே தேவையான படங்களை பிடித்து விடலாம். இவ்வாறு பிடிக்கின்ற படங்களை இணையத்தில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அநேகரின் பொழுது போக்கு. நாம் பிடிக்கின்ற படங்களை வலைப்பூ (Blog) ஒன்றிலே ஏற்றி பகிர்ந்து கொள்வதற்குரிய வசதியைத் தருகின்றது  Photoblog.comஎனும் இணையத்தளம்.photoblog

நாம் கொடுக்கின்ற பயனர் பெயரை(Username) வைத்து கணக்கொன்றை உருவாக்குவதன் மூலமாக நமது பக்கத்திற்குரிய முகவரியைப்  பெற்றுக் கொள்ளலாம்.
Username, Password போன்றவற்றைக் கொடுத்து நமது Dashboard இல் நுழைந்து கொள்ளலாம்.
Dashboard இல் காணப்படுகின்ற New Entry என்பதனைக் Click செய்து வரும் பக்கத்தில் தேவையான விபரங்களைக் கொடுத்து படங்களை ஏற்றிக் கொள்ளலாம்.
படங்களை ஏற்றுகின்ற போது அவற்றிற்குரிய தலைப்பு, வகை,  சிறு விளக்கம் போன்றவற்றை வழங்கலாம்.
நாம் ஏற்றுகின்ற  படங்களுக்கு மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை(Comments) வழங்கக் கூடிய வசதியும் காணப்படுகிறது.
படங்களுக்கு water mark இடுதல், படத்தைச் சுற்றி Border போடுதல் போன்றவைகளையும் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் நமது பக்கத்திற்கு எத்தனை பேர் வந்து சென்றிருக்கின்றார்கள் என்ற விபரத்தினையும் அறிந்து கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளோர் சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் இது. இன்றே உங்களுக்குரிய புகைப்பட வலைப்பூவை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதன் முகவரியை இங்கே Comment பகுதியிலே பகிர்ந்து கொள்ளுங்கள்

இணையத்தளங்களை டவுன்லோட் செய்து ஓப்லைனில் பயன்படுத்த..

நாம் இணையத்தில் தகவல்களைத் தேடுகின்ற சந்தர்ப்பங்களில் சில இணையப்பக்கங்களை எமது கணினியில் சேமித்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சில வேளைகளில் குறிப்பிட்ட இணையத்தளத்திலுள்ள தகவல்கள் அனைத்தையும் எமது கணினிக்கு சேமிக்க வேண்டிய தேவை ஏற்படும். இதன் போது ஒவ்வொரு பக்கமாக க்ளிக் செய்து அதனை சேமிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட இணையத்தளத்தை முழுமையாக டவுன்லோட் செய்யக் கூடிய மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும். அவ்வாறான மென்பொருட்களில் ஒன்றுதான் WinHTTrack .

நமது கணினியின் வேகம், இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இம்மென்பொருள் இணையத்தளங்களை டவுன்லோட் செய்கிறது. டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போது தடங்கல் ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் வசதி, இணையத்தளங்களை நமது வசதிக்கு ஏற்ப வகைப்படுத்தி சேமிக்கும் வசதி, நாம் சேமித்த இணைத்தளத்தில் புதிய விடயங்கள் வெளியிடப்படுகின்ற போது அதனை Update செய்யும் வசதி போன்றவற்றையும் இது கொண்டு காணப்படுகின்றது.  இம்மென்பொருளை http://www.httrack.com என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை(சுருக்கமாக..)

    WinHTTrack ஐ த் திறந்து கொள்ளுங்கள்.

File மெனுவில் New என்தனைக் க்ளிக் செய்யுங்கள்.

    Next என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

சேமிக்கும் இணையத்தளத்திற்குரிய பெயரையும் அதற்குரிய வகையையும் கொடுங்கள்(வகை கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை). சேமிக்கும் இடத்தினைக் கொடுங்கள்.

    Next ஐ க்ளிக் செய்த பின்னர், Action என்பதில் பொருத்தமானதைக் கொடுங்கள்(இப்போது நாம் கொடுப்பது Download my website(s)என்பதனை.)Web addresses(URL) என்பதில் தரவிறக்க வேண்டிய இணையத்தளத்தின் பெயரைக் கொடுங்கள்.

Next ஐ க்ளிக் செய்து, ரேடியோ பட்டனில் முதலாவது இருப்பதனைத் தெரிவு செய்து Finish என்பதனைக் க்ளிக் செய்யுங்கள். இனி இணையத்தளம் டவுன்லோட் ஆகத் தொடங்கும்.

டவுன்லோட் முடிந்த பின்னர் இணையத்தளங்களைப் பார்ப்பதற்கு File மெனுவில் Browse sites என்பனைக் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

WinHTTrack மூலமாக பயனுள்ள இணையத்தளங்களை டவுன்லோட் செய்து பிரயோசனமடையுங்கள்.

இணையத்தில் நாட்காட்டி தயாரிக்க yearlycalendarmaker.net

புதுவருட காலம் ஆரம்பித்து விட்டாலே நாட்காட்டிகளை பெற்றுக் கொள்வது கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவோம்.  நாட்காட்டிகளை இணையத்தில் இருந்தபடியே தயாரித்துக் கொள்ளவும் முடியும். yearlycalendarmaker.net என்ற தளமும் இந்த வசதியை வழங்குகின்றது.

ஆறு படிமுறைகளினூடாக நமக்குத் தேவையான நாட்காட்டியை இலகுவான முறையில் செய்து கொள்ளலாம். நான்கு வகையான வடிவங்களில் நாட்காட்டியை வடிவமைத்துக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது. நமக்குத் தேவையான புகைப்படத்தை சேர்த்துக்கொள்ளும் வசதி, தரப்பட்டுள்ள எழுத்துருக்களில் தேவையானவற்றை தெரிவு செய்யும் வசதி என்பன காணப்படுகின்றன.

பொருத்தமான தகவல்களைக் கொடுத்த பின் Generate Your FREE Yearly Calendar என்பதனை க்ளிக் செய்தவுடன் நமது நாட்காட்டி PDF ஆக திறக்கின்றது. பின் அதனை நாம் சேமித்து ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்களும் ஒரு நாட்காட்டி தயாரித்துப் பார்க்கலாமே!

வாழ்த்து அட்டைகளை உருவாக்க PhotoCardMaker

பண்டிகைகள், புத்தாண்டு, ஏனைய விசேட தினங்களில் நாம் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது வழக்கம். வாழ்த்து அட்டைகளை சுயமாகச் செய்து அல்லது கடைகளில்  வாங்கி அனுப்புவதுண்டு. ஆனால் வாழ்த்து அட்டைகளை மென்பொருள் கொண்டு கணனியிலேயே உருவாக்கக் கூடிய வசதிகளும் காணப்படுகின்றன. இப்போது நாம் வாழ்த்து அட்டைகளை உருவாக்கப் பயன்படும்  PhotoCardMaker எனும் மென்பொருள் பற்றிப் பார்ப்போம்.
4.94 MB கொள்ளளவு கொண்ட இதனை http://www.photo-card-maker.com/free-card-creator/என்ற முகவரியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் பல வசதிகள் காணப்படுகின்றன. நமக்கு விருப்பமான Templateகளை  தெரிவு செய்து கொள்ளலாம். அவர்களுடைய இணையத்தளத்திலிருந்தும் Templateகளை தரவிறக்கிக் கொள்ளலாம். விருப்பமான வாசகங்களை உட்சேர்க்கும் வசதி, அவற்றுக்கு நிறம் மாற்றும் வசதி, அவற்றை ஒழுங்குபடுத்தும் வசதி போன்றனவும் காணப்படுகின்றன. அத்தோடு விருப்பமான புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளவும் வசதி காணப்படுகின்றது.
வாழ்த்து அட்டைகளை எளிமையான முறையில் விரைவாக உருவாக்க உதவும் PhotoCardMaker ஐ  பயன்படுத்தி நீங்களும் வாழ்த்து அட்டைகளை உருவாக்குங்கள்.

உங்கள் தளத்தை மொபைலுக்குரியதாக மாற்ற GinWiz.com

நீங்கள் சொந்தமாக வலைத்தளம் அல்லது வலைப்பூ வைத்திருக்கின்றீர்களா? அதை மொபைலுக்குரியதாக மாற்ற விருப்பமா? இதற்கு உதவுகிறது GinWiz.com  எனும் இணையத்தளம். மிகவும் குறைந்த நேரத்தில் மூன்றே படிகளில் உங்கள் வலைத்தளத்தை அல்லது வலைப்பூவை மொபைலுக்குரியதாக இந்த இணையத்தளத்தில் நீங்கள் மாற்றலாம்.

  • முதலில் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • விரும்பிய Layout ஐ தெரிவு செய்யுங்கள்
  • தளத்தை வெளியிடுங்கள்..

உங்கள் தளத்தை Redirect செய்யும் வசதி, Page View, Bandwidth  என்பவற்றைப் பார்வையிடும் வசதி, Layout ஐ விரும்பிய வகையில் மாற்றம் செய்யும் வசதி எனப் பல்வேறு விடயங்கள் இதில் காணப்படுகின்றன. நீங்களும் இந்த இணையத்தளத்திற்குச் சென்று உங்கள் தளத்தையும் மொபைலுக்குரியதாக மாற்றி மகிழுங்கள். அதற்கு முன் உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.

GinWiz